ரிக் மற்றும் யஜுர் வேத உபாகர்மா நிகழ்ச்சி நடைபெற்றது -ஆகஸ்ட் 1,2 - 2012
ரிக் மற்றும் யஜுர் வேத உபாகர்மா (ஆவணி அவிட்டம்) ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீமடத்தில் ஆகஸ்ட் 1 மற்றும் ஆகஸ்ட் 2 அன்று நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ரிக் உபாகர்மா ஸ்ரவண மாதத்தில் ஸ்ரவண நக்ஷத்திர தினத்தன்று நடைபெறும். உபநயனம் முடிந்தபின் வேத பாடம் முதல் ஆவணி அவிட்டம் தினத்தன்று நடைபெறும். உத்சர்ஜன கர்மா அடுத்த புஷ்ய (தை)மாதம் நடைபெறும். அப்போழுது வேத பாடம் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு வேதாங்க பாடம் பண்ணவேண்டும். சிக்ஷா, வ்யாகர்ணா, சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பசுத்ரம் இவைகளே வேதாங்க பாடம் ஆகும். பின்னர் அடுத்த ஆண்டு ஸ்ரவண மாதத்தில் உபாகர்மா முடிந்தபின் வேத பாடம் ஆரம்பம் ஆகும். இந்த வேத பாடம் பயிலும் கர்மாவிற்கு உபாகர்மா என்று பெயர். இப்படி செய்யும் உபாகர்மாவின் பயனாக வேத மந்திரத்தின் பலம் நம்முடன் கொஞ்சமாவது தங்கும், இல்லையெனில், " யதாயமா" என்று ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறி உள்ள ஆகாரம் போல் ஆகிவிடும்.
HH Pujyasri Jayendra Saraswathi Shankaracharya Swamiji witnessing the Rig Upakarma
HH Pujyasri Shankara Vijayendra Saraswathi Shankaracharya Swamiji witnessing the Rig Upakarma
Sankalpam being performed in the presence of HH Pujyasri Sankara Vijayendra Saraswathi Shankaracharya Swamiji